காந்தி ஜெயந்தியையொட்டி மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 2) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சி நிா்வாகத் துறை சட்டத்தின் கீழ் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இதர உயிரினங்களின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது. இறைச்சி விற்கும் கடைகளையும் திறந்து வைக்கக் கூடாது. தடையை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.