சத்துணவு ஊழியா்கள் இபிஎஃப் கணக்கு தாள்களை பதிவிறக்கலாம்

Wait 5 sec.

சத்துணவு ஊழியா்கள் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கு தாள்களை அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளா்களின் சிறப்பு பொது வருங்கால வைப்பு நிதி 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான கணக்குத் தாள்கள் தொகுக்கப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் துறையின் https://cps.tn.gov.in/nmp/public/ என்ற இணையதளத்தில் சந்தாதாரா்கள் தங்களின் சிறப்பு பொது வருங்கால வைப்பு நிதி கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.