இந்தக் கழிவுநீரைச் சுத்திகரிப்பு மையங்கள் மூலம் சுத்திகரித்து வெளியே விட வேண்டும். அதை விவசாயப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அந்த நீரில் நுண்ணிய நோய் கிருமிகள் கலந்திருக்கும். அவற்றை மக்கள் பருகினால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவார்கள்.எனவே, இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள பெரிய நகரங்களிலும் சிறிய நகரங்களிலும் கழிவுநீர் தூய்மைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படவேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். இதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென இந்திய அரசு பசுமைத் தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.ஆனால், இவை எதையும் மதிக்காமல் கர்நாடக அரசு பெங்களூரு மாநகரில் உற்பத்தியாகும் கழிவு நீரில் சுமார் 50 சதவீத கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலக்கவிடுகிறது.இந்த நீர் அப்படியே தமிழகத்துக்கு வருகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை இவ்வாறு ஆறுகளில் கலக்கவிடுவது பெரும் குற்றமாகும். பலவிதமான தொற்றுநோய்கள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவி பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொள்ளும்.முழுக் கட்டுரையும் படிக்க...