ஆசிய விளையாட்டு: பதக்கப் பட்டியலில் சீனா ஆதிக்கம்! 6-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 12 தங்கங்களுடன் இந்திய அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைய இன்னும் 2 நாள்களே மீதமிருக்கும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.அக். 2 காலை 11.30 மணி நிலவரப்படி, 155 தங்கம், 71 வெள்ளி, 64 வெண்கலம் உள்பட 290 பதங்கங்களுடன் சீனா முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த செப். 30 ஆம் தேதி 4 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணி, நேற்று ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றது.இந்த நிலையில், இன்று காலை மகளிர் வில்வித்தை அணி மற்றும் மகளிர் மல்யுத்தம் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.இதன்மூலம், பஹ்ரைன், ஈரானை பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. வெள்ளி 24, வெண்கலம் 34 உள்பட மொத்தம் 70 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.ஜப்பான் (63 தங்கம்), தென்கொரியா (31 தங்கம்), உஸ்பெகிஸ்தான் (17 தங்கம்) , தாய்லாந்து (14 தங்கம்) ஆகிய நாடுகள் பதக்கப் பட்டியலில் முறையே இரண்டு முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.இன்னும் இரண்டு நாள்கள் மீதமிருக்கும் நிலையில், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்தைவிட அதிக தங்கப் பதக்கங்களை இந்தியா வெல்லும் பட்சத்தில் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்துடன் தொடரை நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.Asian Games: China dominates the medal tally - India moves up to 6th placeஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!