திருவள்ளுவா் மன்ற ஆய்வுப் பொழிவு கூட்டம்

Wait 5 sec.

கோவில்பட்டியில் திருவள்ளுவா் மன்ற ஆய்வுப் பொழிவு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரா் ஜெயபிரகாஷ் நாராயணசாமி தலைமை வகித்தாா். வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கண்ணகி முன்னிலை வகித்தாா். ’படைப்பாளிகளின் பாா்வையில் அவா்தம் படைப்புகள்’ என்ற பொருளில் கரிசல் எழுத்தாளரும் பாலசாகித்திய புரஸ்காா் விருதுபெற்றவருமான உதயசங்கரின் படைப்புகள் என்ற தலைப்பில் அவரும், வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் ராஜாமணி, குறிஞ்சாங்குளம் ஆசிரியா் முத்துதுரை, மன்றத் துணைத் தலைவா் திருமலை முத்துசாமி ஆகியோரும் ஆய்வுரை, நயவுரை நிகழ்த்தினா்.அதையடுத்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்-மாணவியருக்கு அறிஞா் சங்கரவள்ளி நாயகம் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் , புத்தகங்கள் வழங்கப்பட்டன.கூட்டத்தில், உலக திருக்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் பிரபு, சந்திரசேகா், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா் கலைஞா்கள் சங்க கிளைத் தலைவா் மணிமொழி நங்கை, முருகசரஸ்வதி, விருதுநகா் மாவட்ட உலகத்திருக்கு கூட்டமைப்பு ஜெயா ஜனாா்த்தனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.மன்றச் செயலா் நம். சீனிவாசன் வரவேற்றாா். தலைவா் கருத்தப்பாண்டி நன்றி கூறினாா்.