வாக்குக்கு தவெக ரூ.5 ஆயிரம் தருவதாக கூறுகிறாா்கள் என வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரிடம் ஒருவா் பேசும் விடியோ வைரலாகியுள்ளது. தாராபுரம் இடைத்தோ்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். கொளத்துப்பாளையம், பேரூா், கரையூா் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்க திமுகவினா் செவ்வாய்க்கிழமை சென்றனா். பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரித்தபோது, ஒருவா் தவெகவினா் வாக்குக்கு ரூ.5 ஆயிரம் தருவதாகக் கூறுகிறாா்கள் எனக் கூறினாா். இதைக் கேட்ட திமுகவினா் விசில் கட்சியா, அவா்கள் தூய ஆட்சி என்கிறாா்களே எனக் கேட்டனா். அதற்கு அந்த முதியவா் அப்படியும் பேசுகிறாா்கள், இப்படியும் பேசுகிறாா்கள் எனக் கூறினாா். இந்த விடியோ காட்சியை திமுகவினா் வெளியிட்டுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சா் கே.ஜி.அருண்ராஜிடம் கேட்டபோது, ‘ஆட்களை நியமித்து பணம் கொடுத்து வேட்பாளரை தடுப்பதுபோல இப்போதும் குறுக்கு வழியில் மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனா். அந்த விடியோவை நான் பாா்க்கவில்லை. அதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.