தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்ட ஆயுதப்படை காவலா் உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு தனியாா் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், வாகனத்தின் மீது ஏறி நின்று இயந்திரத் துப்பாக்கியால் சுட்டது போன்ற புகைப்படங்களில் இடம்பெற்றவா் காவலா் ராஜா (46). தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இவா், உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ராஜா உயிரிழந்தாா்.