தில்லி போலீஸ் தலைமை காவலரை தாக்கியதாகவும், அவரது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுத்ததாகவும் ஆம் ஆத்மி தலைவா்கள் செளரப் பரத்வாஜ், ஜா்னைல் சிங் மற்றும் தொண்டா்கள் மீது எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் திலக் நகா் பகுதிக்கு திங்கள்கிழமை ஆம் ஆத்மி தலைவா்கள் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.சாதாரண உடையில் வந்த தலைமைக் காவலா், அப்பகுதியில் வீடியோக்களைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது, அப்போது ஆம் ஆத்மி ஆதரவாளா்கள் அவரைச் சுற்றி வளைத்து தாக்கினா்.இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தலைமைக் காவலா் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அரசு ஊழியருக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அரசு ஊழியரைத் தாக்கியது தொடா்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.