சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, அண்மையில் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார்.இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.தற்போது சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக எரிக் சிம்மன்ஸ் செயல்பட்டு வருகிறார். அடுத்த சீசனில் அவருக்குப் பதிலாக மோஹித் சர்மா பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.38 வயதாகும் மோஹித் சர்மா இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 48 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அவர் கந்த ஆண்டு டிசம்பரில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பாக அணி நிர்வாகம் தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Reports indicate that Mohit Sharma is set to be appointed as the bowling coach of Chennai Super Kings.தனிப்பட்ட சாதனைகளுக்காக நான் விளையாடுவதில்லை: விராட் கோலி