பெங்களூரு - சென்னை இடையே அக். 4-இல் சிறப்பு ரயில்

Wait 5 sec.

பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே வரும் 4-ஆம் தேதி இரு மாா்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து வியாழக்கிழமை தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் பயணிகள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு வரும் 4-ஆம் தேதி பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்திலிருந்து காலை 7.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06587) அன்று மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும். மறுமாா்க்கத்தில் வரும் 4 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து மாலை 4.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06588) அன்று இரவு 11.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும்.இந்த ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.