நடிகர் நானி நடிப்பில் வெளியான தி பாரடைஸ் திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (செப்.24) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அனிருத் இசையமைப்பில் உருவான பாடல்கள் கவனம் ஈர்த்திருந்தன. மேலும், ஆக்ஷன் காட்சிகளுக்கு உணர்ப்பூர்வமான பின்னணி இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் ஆச்சரியப்படும் வகையில் வணிக ரீதியாக தொடர் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. முதல் நாளில் ரூ. 88 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 நாள் வசூலாக ரூ. 155 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவே, நடிகர் நானியின் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். மேலும், இந்த வார இறுதிவரை கூட்டம் இருக்கும் என்பதால் ரூ. 200 கோடியை நெருங்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. டிமான்டி காலனி - 3 மீதான தடையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்! The box office performance of the film The Paradise, starring actor Nani, has come as a surprise.