ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, மகேந்திர சிம்மன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை போக்ஸோ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் கடந்த ஆக. 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதே குற்றச்சாட்டில் வீரமணி உதவியாளர் கணேசன் கடந்த வாரம் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களுக்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க வீரமணியிடம் இருந்து சாந்தி ரூ. 24.63 லட்சம் பெற்றுள்ளார். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. இவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அச்சுறுத்தவும் வாய்ப்புள்ளது. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன்பு இன்று (செப். 29) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்கள் முறையாக கைது செய்யவில்லை, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. ஏற்கனவே காவல்துறை காவலில் எடுத்து விசாரணை முடித்துள்ளனர். இதற்கு மேல் சிறையில் அடைக்க வேண்டிய தேவை இல்லை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கைது செய்து 40 நாள்கள் வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியும். விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.தனியார் தொண்டு நிறுவனம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி தள்ளிவைத்தார்.The Chennai POCSO Court has reserved its order on the bail petitions of Shanthi and Mahendra Simman, who were arrested in the Gem Veeramani case.