நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மண்டாடி படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால், இந்தத் திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கப்பட்டன.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இந்தப் படம், ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இதில் இடம்பெற்ற படகுப்போட்டி காட்சிகள் ஆச்சரியப்படும்படி எடுக்கப்பட்டதால் ரசிகர்களின் விருப்பமான படமாக மாண்டாடி மாறியது. இந்தப் படம் உலகளவில் ரூ. 130 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் வரும் அக். 8 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.Information regarding the OTT release of actor Soori's film *Mandadi* has come to light.Mandaadi Movie review | பந்தயம் அடித்ததா? நடிகர் சூரியின் மண்டாடி? | Soori | Review