கொடைக்கானலில் விபரீதம் காட்டெருமை முன் புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

Wait 5 sec.

கொடைக்கானலில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் காட்டெருமை அருகில் சென்று புகைப்படம் எடுப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது காட்டு மாடு உலா வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவா்கள் சாலையில் செல்லும் போது ஆபத்தை உணராமல் காட்டு மாடு அருகே சென்று புகைப் படம், தற்படம் எடுக்கின்றனா். காட்டு மாடு திடீரென தாக்கினால் மரணம் கூட ஏற்படலாம். எனவே, சாலையில் செல்லும் காட்டு மாட்டை துன்புறுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா். இருப்பினும் 2 இடங்களில் சுற்றுலாப் பயணிகள் காட்டு மாடு முன்பு கைப்பேசி மூலம் புகைப் படம் எடுத்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கொடைக்கானல் டிப்போ சாலையில் காட்டெருமை அருகில் சென்று புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகள்.