கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தில் சதி நடந்துள்ளதாக கூறி தலைமைச் செயல் அதிகாரி அலுவலகத்தில் முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.கர்நாடகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் போது, முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து மொத்தமாக நீக்க முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், முன்பே அச்சிடப்பட்ட போலி படிவம்-7 விண்ணப்பங்கள் மூலமாக முஸ்லிம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்ட விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயர் தவறாக இருந்தாலோ, அவர் இறந்துவிட்டாலோ, வேறு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டாலோ அவரது பெயரை நீக்கக் கோரி படிவம்-7 வழங்கப்படும். ஆனால், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வசித்து வரும் உயிருடன் இருக்கும் வாக்காளர்களை ‘இங்கு இவர் வசிக்கவில்லை’ என்று கூறி நீக்க இந்த படிவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளது.படிவம் 7 விண்ணப்பங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்களை நீக்குவதற்கு முயற்சி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், படிவம் 7 விண்ணப்பங்களைப் பயன்படுத்தி தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் கோரி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் வியாழக்கிழமை பெங்களூருவில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வெளியே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைமைத் தேர்தல் அதிகாரிடம் மனு அளித்த பின்னர், முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் தலைமைத் தேர்தல் அலுவலகப் படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டிகே சிவகுமார், “பல்லாரியில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 13,000 படிவம் 7 சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. மைசூரு, பெலகாவி, பால்கி ஆகிய தொகுதிகளில் படிவம் 7 வழங்கப்பட்டதற்கான ஆவணங்களையும் காணொளிகளையும் சமர்ப்பித்துள்ளோம். வழக்குப் பதிவு செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.‘கர்நாடகம்: எஸ்ஐஆரில் 45 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி’ - முதல்வர் சிவகுமார்Karnataka Chief Minister DK Shivakumar and ministers staged a dharna on the premises of the Chief Electoral Officer’s (CEO) office in Bengaluru on Thursday, demanding registration of a criminal case and a probe into alleged conspiracy to delete names of eligible voters using Form 7 applications.