2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் அடுத்தாண்டு (2027) நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணை வியாழக்கிழமை (அக். 1) வெளியிடப்பட்டது.ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2027) காந்தி பிறந்தநாளான அக். 2 ஆம் தேதி தொடங்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.இதன்படி, அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. குரூப் ஏ, குரூப் பி என இரண்டு பிரிவுகளாக மொத்தமாக 12 அணிகளில் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மற்றும் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி, குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.அக். 2 ஆம் தேதி தொடங்கும் போட்டியில் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணிகள் விளையாடுகின்றன. இந்தியா தனக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அக். 7 ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து அக். 10 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வேயும் நேரடியாகத் தகுதி பெற்ற நிலையில், மற்ற எட்டு அணிகள் செப். 30 ஆம் தேதி வரையிலான ஐசிசி ஆடவர் ஒருநாள் தரவரிசையின் மூலம் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள நான்கு இடங்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் மூலம் தீர்மானிக்கப்படவுள்ளது.தகுதிச் சுற்றில் முதலிடம் பெறும் அணி நேரடியாக குழு பிரிவுக்கு முன்னேறும். மற்ற 3 அணிகள் சூப்பர் சீரிஸில் போட்டியிடும் போட்டிகள் அக். 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.The International Cricket Council has released the schedule for the 2027 ICC ODI World Cup.