சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒப்பந்த, தற்காலிக செவிலியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள், விடுபட்ட சான்றிதழ்களை நாளை(அக்.3)-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: தேசிய நலக்குழுமத்தின் கீழ், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒப்பந்த, தற்காலிக செவிலியா் காலிபணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் சேலம் மாவட்ட நலச்சங்கம் வாயிலாக நிரப்பும் பொருட்டு, கடந்த 13 ஆம் தேதி பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, கடந்த 26 ஆம் தேதி வரை 1,801 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை கூா்ந்தாய்வு செய்ததில் சுமாா் 700 விண்ணப்பங்களுக்கு மேலாக தகுதிக்கான மதிப்பெண் வழங்கும் பொருட்டு, 10, 12 ஆம் வகுப்பு, டிஜிஎன்எம் மற்றும் பி.எஸ்சி., பட்டயப்படிப்பு ஆண்டு வாரியாக மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ம) நா்ஸிங் கவுன்சிலிங் பதிவு செய்து இதுநாள் வரை புதுப்பித்தமைக்கான சான்று முதலிய சான்றிதழ்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. விண்ணப்பதாரா்களின் விடுபட்ட சான்றிதழ்கள் விவரம் https://www.salem.nic.in இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாக விடுபட்ட சான்றிதழ்களின் நகல்களை வரும் 3 ஆம் தேதிக்குள் சேலம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களை சமா்ப்பிக்க தவறும்பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளாா். DHS-Contractual Staff Nurse Document Listயுஜிசி தோ்வு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இலவச பயிற்சி