ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டு தொடரின் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய விளையாட்டுத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை காலை ஒகாசாகி சுவோ சோகோ பூங்கா சதுக்கத்தில் ஆடவருக்கான ரிகர்வ் வில்வித்தையின் இறுதிப்போட்டி நடைபெற்றது.வில்வித்தை அரையிறுதியில் ஈரானை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்டது.இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, யஷ்தீப் போகே மற்றும் நீரஜ் சௌகான் ஆகிய மூவர் கொண்ட அணி, தென்கொரியாவின் லீ வூ-சியோக், கிம் ஜெ டியோக் மற்றும் கிம் வூ ஜின் ஆகியோர் அடங்கிய அணியை எதிர்கொண்டனர்.தொடக்கத்தில் வலிமை மிக்க நடப்பு சாம்பியனான கொரியாவுக்கு சவால் அளித்தாலும், அந்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இறுதியில் 56-56, 50-57, 54-56 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. 1-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, வெள்ளிப் பதக்கத்துடன் தனது பயணத்தை நிறைவு செய்தது.The Indian men's recurve archery team signed off with a silver medal after going down 1-5 to defending champions Korea in a roller-coaster summit clash at the Asian Games here on Friday.