சேலம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலை: 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Wait 5 sec.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட உதவியாளருடன் கூடிய அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Assistant cum Bench Clerkகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.25,000தகுதி: அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கணினி இயக்கும் பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.பணி: Junior Assistant cum Record Clerkகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.20,000தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.பணி: Office Assistantகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.13,000தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: https://salem.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தாரர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் எந்தெவாரு முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.415. நான்காவது தளம். மாவட்ட ஆட்சியகரம் சேலம் -636 001 தொலைபேசி எண்.0427-2415900பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 12.10.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.District Child Protection Unit, Salem District – Applications are invited for Assistant-cum-Bench Clerk, Junior Assistant-cum-Bench Clerk and Office Assistant Posts on contract basis-26.09.2026திருச்சி மாவட்ட இளைஞர் நீதிமன்றத்தில் வேலை: 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!