அன்புடன் மகி

Wait 5 sec.

'ஜோ' படத்தை அடுத்து ஹரிஹரன் ராம் இயக்கும் 'அன்புடன் மகி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார். இசையும் அவரே. கிரிக்கெட் வீரராக அவர் நடிப்பதால், இதற்கான பயிற்சி மேற்கொண்டுள்ளார். மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை 'கருடன்', 'மாமன்' படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில், முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் காட்சியமைப்பு, கதையின் தன்மை, ஒட்டுமொத்த திரை அனுபவம் குறித்த பார்வையை வழங்கும் விரிவான லுக் புக்கையும் வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், 2027-ஆம் ஆண்டில் திரைக்கு வரவுள்ளது.