பிரபல இசையமைப்பாளர் மகன் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். தமிழ் சினிமாவில் பெரியண்ணா, பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரணியின் மகன் திருவாசகன் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகிறார். இளைஞர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய மர்மக் கதையாக உருவாகும் இப்படத்தை ராம் சேவா எழுதி, இயக்குகிறார். பரணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெற உள்ளது. இதனை ஸ்டைல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ரஷ்மிகாவின் மைசா வெளியீடு ஒத்திவைப்பு!The famous music composer's son is going to make his debut in cinema as the protagonist.