பல்லார் அறியப் பறையறைந்து, நாள்கேட்டுக்,கல்யாணஞ் செய்து, கடிபுக்க-மெல்லியல்காதன் மனையாளும் இல்லாளா, என்னொருவன்ஏதின் மனையாளை நோக்கு? (பாடல் 86 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)திருமணத்திற்குத் தகுதியான நாளினைச் சான்றோர் வாயிலாகக் கேட்டுத் தெரிந்து, அந்நாளிலே பலரும் அறியும்படியாக மணப்பறைகளை முழக்கி, கல்யாணம் செய்து கொள்ளப்பட்டு தம் பாதுகாப்பில் வந்து சேர்ந்த, மென்மையான தன்மையினையும் தன்பால் விருப்பத்தையும் உடைய, மனையாட்டியும் தன் வீட்டிலே இருப்பவளாயிருக்க, அவளைத் தவிக்க விட்டுவிட்டு அயலானின் மனைவியை ஒருவன் விரும்பிப் பார்ப்பதுதான், என்ன காரணமோ?