மெஸ்ஸியின் 3 கோல்களை தடுத்த கொலம்பஸ் கோல்கீப்பர்..! இன்டர் மியாமிக்கு முதல் தோல்வி!

Wait 5 sec.

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கோப்பைக்கான முதல் பிளேஆஃப் ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி கொலம்பஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் இன்று அதிகாலை புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் நிறைவு செய்த கொலம்பஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 43 சதவிகித நேரமும் கொலம்பஸ் அணி 57 சதவிகித நேரமும் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். மிகவும் விருவிருப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் கொலம்பஸ் அணி 3-0 என அபார வெற்றி பெற்றது. கொலம்பஸ் வீரர்கள் மூவருக்கும் இன்டர் மியாமி வீரர்கள் ஐவருக்கும் யெல்லோ கார்டுகள் அளிக்கப்பட்டன. இண்டர் மியாம்யின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கும் யெல்லோ கார்டு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி இலக்கை நோக்கி அடித்த மூன்று அற்புதமான ஷாட்டுகளையும் கொலம்பஸ் கோல்கீப்பர் பேட்ரிக் ஷூல்டே அபாரமாக செயல்பட்டுத் தடுத்தார். இந்தப் போட்டியின் 36ஆவது நிமிஷத்தில் இன்டர் மியாமி அணியின் வீரர் கோன்சாலோ லுஜனுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டது. 10 பேருடன் இன்டர் மியாமி தடுமாறியது. ஐந்து கோல்களைத் தடுத்த கொலம்பஸ் கோல்கீப்பர் பேட்ரிக் ஷூல்டே ஆட்ட நாயகன் விருது வென்றார். எம்எல்எஸ் தொடரில் இரண்டாவது பிளேஆஃப் போட்டியில் இன்டர் மியாமி கொலம்பஸின் சொந்த மண்ணில் மோதுகிறது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி வென்றால் மட்டுமே, இருவருக்குமான மூன்றாவது போட்டிக்கு ஆட்டம் செல்லும்; இல்லையெனில் கொலம்பஸ் வென்றால் நேரடியாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. WHAT A SAVE! Patrick Schulte denies Messi to maintain the clean sheet. // Audi MLS Cup Playoffs pic.twitter.com/uxb24wuubg— Major League Soccer (@MLS) November 21, 20265 saves in a win at Miami! Man was on a mission Patrick Schulte earns Superior @MichelobULTRA Player of the Match honors. pic.twitter.com/l6GB5sb2MH— Major League Soccer (@MLS) November 22, 2026பெனால்டியை தவறவிட்ட ரொனால்டோ: அல்நாசா் தோல்விColumbus goalkeeper denies Messi three goals..! First defeat for Inter Miami!