அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்துத் தொடரின் வரலாற்றில் தங்கக் காலணி விருதை இரண்டாவது முறையாக வென்ற முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.சமீபத்தில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த 39 வயதான லியோனல் மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி கிளப்பில் விளையாடி வருகிறார். குரூப் சுற்றுக்கான போட்டிகள் முடிவடைந்தன. தற்போது, பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்டர் மியாமி தனது முதல் ஆட்டத்தில் கொலம்பஸ் உடன் 0-3 என படுதோல்வி அடைந்தது. எம்எல்எஸ் கால்பந்துத் தொடரில் ஒரு சீசனுக்கு மொத்தமாக 34 போட்டிகள் நடைபெறும். இதில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு கோல்டன் பூட் ( தங்கக் காலணி) விருது அளிக்கப்படும். கடந்த சீசனில் இந்த விருதை மெஸ்ஸி வென்றிருந்தார். நடப்பு சீசனிலும் மெஸ்ஸியே இந்த விருதை வென்று அசத்தியுள்ளார். இந்த சீசனில் மட்டும் மெஸ்ஸி 26 கோல்கள், 17 அசிஸ்ட்டுகளுடன் 43 கோல் பங்களிப்பு செய்து இந்த விருதினை வென்றுள்ளார். இதுவரை தொடர்ச்சியாக யாருமே இரண்டு முறை இந்த விருதை வெல்லாத நிலையில், மெஸ்ஸி இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.Messi presented with his Audi Golden Boot award pic.twitter.com/IvxCv79K5Z— Major League Soccer (@MLS) November 21, 2026First back-to-back Audi Golden Boot winner in MLS history pic.twitter.com/OZUV5clHhj— Major League Soccer (@MLS) November 21, 2026முதல் ஆசிய வீரர்... விக்கெட் கீப்பர் பேட்டராக ரிஷப் பந்த் புதிய வரலாறு! Leo Messi create History: First back-to-back Audi Golden Boot winner in MLS history