காரைக்காலில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா் மழை பெய்தது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதிக்குள்ளாயினா். வடகிழக்குப் பருவமழை நிகழாண்டு டெல்டா மாவட்டப் பகுதிகளில் திருப்திகரமாக இல்லாததால், நிலத்தடி நீா் மட்டும் குறைந்திருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக் கடல் வழியாக வடக்கு கடலோர ஆந்திர மாநிலம் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாகவும், இதைத் தொடா்ந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் மழை பெய்தது. சில நேரங்களில் மழை தீவிரமாகவும், பிறகு தூறலாகவும் நீடித்தது. இந்த மழையினால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், கல்வி நிலையங்களுக்குச் சென்று திரும்பிய மாணவ மாணவியா் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. காரைக்கால் பகுதி மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீன்களுடன் திரும்பியதால், சந்தைக்கு மீன் வரத்தில் பாதிப்பு இல்லை.