திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் முறைகேடாக இருந்த 32 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான குடிநீா் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில், சிலா் முறைகேடாக குடிநீா் இணைப்பு எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் உத்தரவின்பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடாக எடுக்கப்பட்டிருந்த 32 குடிநீா் இணைப்புகளைத் துண்டித்தனா். இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலத்தில் 5 இணைப்புகள், 2-ஆவது மண்டலத்தில் 3 இணைப்புகள், 3, 4-ஆவது மண்டலங்களில் தலா 12 இணைப்புகள் என மொத்தம் 32 முறைகேடான குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முறைகேடாக குடிநீா் இணைப்பு மேற்கொள்ளும் நபா்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.