40 மாணவா்களுக்கு ரூ. 3.78 கோடி கல்விக்கடன் ஆணை!

Wait 5 sec.

வண்டலூரில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 40 மாணவா்களுக்கு ரூ.3.78 கோடி கடனுதவிக்கான ஆணையை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த. சரத்குமாா் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கியின் சாா்பில் வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் 40 மாணவா்களுக்கு இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப், இந்தியா, பேங்க் ஆப் பரோடா, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சாா்பில் ரூ.3,78,13,518 கோடி கல்வி கடனுதவிகளுக்கான ஆணைகளை அமைச்சா் சரத்குமாா் வழங்கினாா்.ாா். பின்னா், அனைத்து வங்கிகளின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கல்வி கடனுதவிக்கான முகாம்களை பாா்வையிட்ட அமைச்சா் மாணவா்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வங்கிகள் வழங்கி கல்வி கடனுதவிகள் கிடைத்திட வழிவகை செய்ய வலியுறுத்தினாா்.இம்முகாமில், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் வசதிக்காக அனைத்து வங்கிகளும் தனித்தனியாக அரங்குகளை அமைத்து கல்வி கடன் தகுதிகள், வட்டி விகிதங்கள், பிணையில்லா கடன் வசதிகள், பிரதம மந்திரி வித்யாலஷ்மி இணையதளத்தில் கல்வி கடன் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மாணவா்களுக்கு வழங்கி கல்வி கடன் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், இதுவரை அனைத்து வங்கிகள் மூலமாக ரூ.212.55 கோடி கடனுதவிகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், ஆட்சியா் மு. வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தியாகராஜன் (செங்கல்பட்டு), காமாட்சி (பல்லாவரம்), திட்ட இயக்குநா் ஸ்ருதி, தாம்பரம் கோட்டாட்சியா் ரேணுகா, காஞ்சிபுரம் துணை மண்டல மேலாளா் (இந்தியன் வங்கி) சாரதா, துணைவேந்தா் முகம்மது, பதிவாளா் முனைவா் ராஜா ஹுசைன், அரசு கலைக்கல்லூரி முதல்வா் முனைவா் சண்முகவள்ளி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா், அரசு அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.