புதுச்சேரியில் டெங்கு பாதிப்புக் காரணமாக பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து டெங்கு காய்ச்சலால் இறந்தவா்கள் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்தது.புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கூடுதலாகியுள்ளது.புதுச்சேரி முதலியாா்பேட்டை அனிதா நகரைச் சோ்ந்த முகமது இா்பான் (22), மூலக்குளம் பிச்சைவீரன்பேட் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஹரிணி (19) ஆகியோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.இந்நிலையில், நோணாங்குப்பத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி நஷீதா (16) டெங்கு காரணமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து புதுச்சேரியில் டெங்குவுக்கு இதுவரை இரு மாணவிகள் உள்பட 3 போ் உயிரிழந்துள்ளனா்.இன்றுமுதல் வீடுவீடாக ஆய்வு: இந்த நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து வீடு, வீடாகச் சென்று புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை (நவ. 25) முதல் ஆய்வு மேற்கொள்கின்றனா்.இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார நிலையங்களிலும் புதன்கிழமை (நவ. 25) முதல் வீடுகளில் கொசு இனப்பெருக்கக் கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தல், காய்ச்சல் கண்காணிப்பு, நோய் பரவும் மூலத்தைக் குறைத்தல் மற்றும் பிற நோய்க் கடத்தி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்போது, சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். காய்ச்சல் ஏற்படும் எவரும் மருத்துவப் பரிசோதனைக்காக உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்குச் செல்ல வேண்டும். கடுமையான டெங்குவின் எச்சரிக்கை அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. டெங்கு தடுப்பு ஒவ்வொரு வீட்டிலும் தொடங்குகிறது. டெங்கு பரவுவதைத் தடுக்க, வாரந்தோறும் சுத்தம் செய்வதும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதும் அவசியமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.