சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் நவோரியா: கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியீடு!

Wait 5 sec.

நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள ’நவோரியா’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைகளமுடைய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநராகனவர் சிம்புதேவன். இவர் இயக்கத்தில் நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’நவோரியா’.இப்படத்தில் நடிகர்கள் பாலசரவணன், ஆன் ஷீதல், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ஆரி, நிழல்கள் ரவி, பாலாகி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் டி. இமானின் இசையமைத்துள்ளார். நவோரியா படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற டிச. 18 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது. இரண்டு வானம் படத்தின் புதிய பாடல் வெளியானது!'Navoriya', starring Vimal and directed by Chimbu Deven: Character introduction posters released!