ரூ. 52,914-க்கு சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன்! ஃபிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை!

Wait 5 sec.

சாம்சங் நிறுவனத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போன் ரூ. 52,914-க்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி கூடுதலாக வங்கிக் கடன் அட்டைகள் மற்றும் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும்போது கூடுதலாக ரூ. 34,300 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ. 1,09,999. 12GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய டைட்டானியம் ஜெட்பிளாக் விலை ரூ. 89,999.ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் ரூ. 89,999-க்கு சாம்சங் கேலக்ஸி எஸ் 25 வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ. 2,785 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதிகபட்சமாக ரூ. 34,300 வரை சலுகை வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை மாற்றினால், இந்த அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். இதுமட்டுமின்றி மாதம் ரூ. 19,095 தவணை முறை சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சலுகைகள் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனை ரூ. 52,914-க்கு வாடிக்கையாளர்களால் பெற முடியும்.பண்டிகை கால தள்ளுபடி முடிந்த பிறகும் ஃபிளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அடுத்த மாதம் வெளியாகிறது ஐக்யூ 16 ஸ்மார்ட்போன்! சிறப்புகள் என்னென்ன?Samsung Galaxy S25 smartphone for Rs. 52,914 Sensational offer on Flipkart