நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் உள்ள 6,476 மீட்டர் (21,247 அடி) உயரம் கொண்ட மேரா சிகரத்தை ஏறி முடித்த 66 வயதான அமெரிக்க மலையேற்ற வீரர், இறங்குகையில் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.உலகின் உயரமான 14 சிகரங்களில் 8 நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிகரங்களில் ஏற வெளிநாட்டிலிருந்து மலையேற்ற வீரர்கள் பலர் நேபாளத்திற்கு வரும் நிலையில், அந்நாட்டிற்கு இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரிழிவுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்த அச்சம் அரசிற்கு ஏற்பட்டது. ஆனால், பெரும்பாலான மலையேற்ற வீரர்கள் தங்களின் பயணங்களை ரத்து செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.இந்த நிலையில், 66 வயதான அமெரிக்க மலையேற்ற வீரர் ரிச்சர்ட் கார்லோஸ் ஸ்கிட்மோர் என்பவர் நவ. 21 அன்று காலை 10 மணியளவில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள பகுதியில் 6,476 மீட்டர் (21,247 அடி) உயரம் கொண்ட மேரா சிகரத்தின் உச்சியை அடைந்தார்.பின்னர், கீழிறங்கும் பாதையில் சுமார் 5,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முகாமில் இரவு அவர் தங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (நவ. 22) காலை அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்திள்ளனர்.இதனைத் தொடர்ந்து, அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனைக்காக காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழப்புக்கான காரணம் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.ரஷிய போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புதல்!66-year-old American mountaineer dies after scaling a 6,476-meter peak in Nepal!