டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என முதல்வரிடம் அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் திங்கள்கிழமை (நவ. 23) தெரிவித்தார்.முதல்வர் விஜய்யின் பாமணி முகாம் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் பங்கு பெற்றனர்.முதல்வருடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:டெல்டா மாவட்டங்களான கடலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை அடக்கிய டெல்டா பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கிற காரணத்தினால் அங்கே உள்ள பயிர்கள் கருகும் சூழல் உள்ளது.அந்த டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் அமைச்சர்கள் ராஜேஷ் குமார், வன்னி அரசு, ஷாஜகான் மற்றும் நானும் சேர்ந்து கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அவர்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, அங்கு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளை கணக்கிட வேண்டும். மேலும், இது தொடர்பான துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வரிடம் வலுவான கோரிக்கையை வைத்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் மாவட்ட ஆட்சியரிடம் குறிப்புகளை எடுத்து, அதனடிப்படையில் இன்று முதல்வரிடம் இந்த கோரிக்கையை வைத்தேன். ஆகையால், விரைவில் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என்று தெரிவித்தார்.திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!Higher Education Minister Viswanathan stated on Monday (Nov. 23) that ministers have requested the Chief Minister to declare the Delta districts as drought-affected areas.