அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் இறுதி டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் ஆகிய படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் இயக்கத்தில் உருவான மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புதிய படம் ’அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே’.மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான ’டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் இப்படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதனால், இப்படத்தின் மீது மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பு எழுந்துள்ளது.முன்பதிவிலேயே இப்படம் இந்திய மதிப்பில் ரூ. 1,000 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் இறுதி டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் படத்தைப் போன்று இப்படத்தின் இறுதியில் அனைத்து அவெஞ்சர்களும் இணைந்து டூம்ஸ்டே கதாபாத்திரத்தை எதிர்ப்பது போன்ற காட்சி டிரைலரில் இடம்பெற்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.இப்படம் உலகம் முழுவதும் டிச. 18 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.#AvengersDoomsday— Final TrailerStars : Chris Hemsworth - Vanessa Kirby - Anthony Mackie - Sebastian StanMusic : Alan Silvestri (Endgame)Direction : Russo Brothers (Endgame)December 18 2026 Theatrical Release!! https://t.co/BQlq3kZD6Y— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 23, 2026Avengers: Doomsday – Final Trailer Released!