அமெரிக்க தாக்குதல்களில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி படுகொலை மற்றும் மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளது.ஈரான் மீது கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதல்களில் தலைமை மதகுரு கமேனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீதும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 120 பள்ளிக் குழந்தைகள் உள்பட 178 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், போர்க்குற்றங்கள் எனக் குற்றஞ்சாட்டப்படும் இந்தச் சம்பவங்களுக்கு குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் ஈரானிய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரானின் சட்டவிவகாரத் துறை துணைத் தலைவர் மஜீத் அன்சாரி கூறியுள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவற்றில் சில வழக்குகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டன, மற்றவை பதிவு செய்யும் செயல்பாட்டில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராகக் கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த இந்தப் போரில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றவே அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு! Iran has announced that it has filed lawsuits in American and European courts regarding the killing of Khamenei in a U.S. attack, as well as an attack on a school in Minab.