திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக விசிக சார்பில் நாளை பேரணி நடைபெறவுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதுதொடர்பாகப் பதியப்பட்ட வழக்கில் இந்தாண்டு குறிப்பிட்ட தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் நாளை பேரணி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார். அவரது சமூக ஊடகப் பதிவில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலின் முன்பு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த ஆண்டும்வழக்கம்போல அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால், வம்பிழுப்பவர்கள் வழக்குத் தொடுத்திருப்பது அருகிலுள்ள தர்காவுக்குச் செல்லும் வழியில் நிற்கும் ஒரு கல்தூணில் ஏற்றுவோம் என்றுதான். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தீர்ப்பு மதுரையில்நிலவும் நல்லிணக்கமான சூழலைப் பாதிக்கும் வகையிலான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில், விசாரணையைத் தொடங்காமலேயே, ஆதாரங்களை ஆய்வு செய்யாமலேயே நிபந்தனையுடன் இப்போதைக்கு அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே ஆகும். வழக்கமாக, ஆய்வுக்கு முன்னர் இடைக்காலத் தீர்ப்பு, 'ஸ்டேட்டஸ் க்வா' (Status qua) -இருக்கும் நிலையே தொடரட்டும்-என்றே வழங்குவர். ஆனால், இந்த தீர்ப்பு அவ்வாறின்றி இறுதி தீர்ப்பு இப்படி தான் இருக்கும் என சொல்லாமல் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.இந்நிலையில், இதனை எதிர்த்து சீராய்வு மனுவைத் (ரிவீயூ) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அரசின் நேர்மையான இந்த நிலைபாட்டினை விசிக வரவேற்கிறது. அத்துடன் , இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை (நவ-23) மாலை நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் விசிக சார்பில் நான் பங்கேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! முதல்வர் விஜய் அரசுக்கு ஏன் இப்படி எரிகிறது? நயினார் நாகேந்திரன் கேள்விThiruparankundram Deepam issue: VKC rally against interim verdict! Announcement by Thirumavalavan!