தேனி அருகே வீடு புகுந்து 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி அரண்மனைப்புதூரைச் சோ்ந்த முருகேசன் மனைவி மணியம்மாள் (44). இவா், சவலப்பட்டியில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். பழைய வீட்டிலிருந்த பொருள்களை புதிய வீட்டுக்கு இடமாற்றம் செய்தாா்.இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு புதிய வீட்டைப் பூட்டி விட்டு அரண்மனைப்புதூருக்கு சென்றாா். மறுநாள் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.