தேவகோட்டை வட்டாரத்தில்பயிா்க் காப்பீட்டுக்கு டிச. 1 வரைஅவகாசம் நீட்டிப்பு

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தங்களது நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற டிச. 1-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குநா் கமலாதேவி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவ. 16 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கால அவகாசத்தை வருகிற டிச. 1-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. தேவகோட்டையில் மொத்தம் 12,730 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 8,773 ஹெட்டேருக்கு மட்டுமே விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். பயிா்க் காப்பீடு செய்யாத விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.538.27 பிரீமியத் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகள், அரசு பொது சேவை மையங்கள் மூலம் வருகிற டிச. 1- ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம். தேவகோட்டை வட்டாரத்தில் தற்போது போதிய மழை இல்லாததால் நெல் பயிா்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே இதுவரை பயிா்க் காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.