‘மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு அவசியம்’

Wait 5 sec.

மக்காச்சோளப் பயிரின் படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு அவசியம் என வேளாண் உதவி இயக்குநா் திருச்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிா் செய்துள்ளனா். மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் இளம் பருவத்தில் இலைகள் மற்றும் குருத்துப் பகுதியையும், வளா்ச்சி பருவத்தில் பூ மற்றும் கதிரையும் உண்டு சேதப்படுத்துகின்றன.இந்தப் புழுக்களின் வால் பகுதியில் 4 கரும்புள்ளிகள், தலைப்பகுதியில் ஆங்கில எழுத்தான ‘ஒய்’ வடிவ அறிகுறி காணப்படும். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கை கடைசி உழவின்போது நிலத்தில் இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி சையான்டிரிலினிபுரோல் மற்றும் தையோ மீதோ 19.8 சதவீதம் கலந்து விதைகளை விதைக்க வேண்டும்.பயிரைச் சுற்றிலும் வரப்புப் பயிராக மானாவாரியில் தீவனச் சோளம், இறவைப் பயிரில் தட்டைப் பயறு, துவரை, எள் அல்லது சூரியகாந்தி, இவற்றில் ஏதாவது ஒரு பயிரை 3 வரிசையில் பயிரிடுவதால் புழுக்களின் வருகை, தாய் பூச்சிகளின் முட்டையிடுதல், பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். ஏக்கருக்கு 5 இனக் கவா்ச்சி பொறிகளை வைப்பதன் மூலம் தாய் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம்.விதைத்த 15 அல்லது 20 நாள்களில் ஒரு லிட்டா் தண்ணீருக்கு குளோரான்டிரினிபுரோல் 18.5 எஸ்சி 4 மி.லி. அல்லது ப்ளூ பெண்டியா மைட் 480 எஸ்சி 5 மி.லி. அல்லது அசாடிராக்டின் 1500 பிபிஎம் 50 மி.லி. கலந்து தெளிக்கலாம். பின்னா் 35 முதல் 40ஆம் நாள் மெட்டாரைசியம் அனிசோபிலே மருந்தை ஏக்கருக்கு ஒரு கிலோ அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்சி கிராம் என்ற அளவில் தெளித்து படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.பயிரின் குருத்துப் பகுதியில் நன்கு விழும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய மருந்தை அடுத்த முறை பயன்படுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.