தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மலையாள நடிகர் பார்வதி திருவோத்து தனக்கு ஏடிஎச்டி (அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்) எனும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “சார்லி”, “பெங்களூர் டேஸ்” உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மொழிகளைக் கடந்து அறியப்படுபவர் நடிகை பார்வதி திருவோத்து. இவர் தமிழில், இயக்குநர் பா. ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான “தங்கலான்” படத்திலும், பாலிவுட்டில் மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் “கரீப் கரீப் சிங்கிள்” படத்திலும் நடித்துள்ளார்.மேலும், திரைத்துறை மற்றும் சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் நடிகை பார்வதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், மலையாள தொகுப்பாளர் ரஞ்சனி ஹரிதாஸ் உடனான நேர்காணலில், தனக்கு ஏடிஎச்டி எனும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, நடிகை பார்வதி தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் கூறுகையில், “எனக்கு ஏடிஎச்டி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைப் பெரிய விஷயமாக்க நான் விரும்பவில்லை. எனக்கு நேரம் வேறொரு விதத்தில் செயல்படுவது போலத் தோன்றுகிறது. தேவைப்பட்டால் என்னால் நேரத்தை நீட்டித்து உழைக்க முடியும். அதற்காக நான் தூக்கத்தை இழக்கிறேன் என்று அர்த்தமில்லை” எனக் கூறியுள்ளார்.ஏற்கெனவே, நடிகர்கள் ஃபகத் ஃபாசில், ஆலியா பட் ஆகியோர் தங்களுக்கு ஏடிஎச்டி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பாடகராகும் அபிஷன் ஜீவிந்! பிக்காசோ பட முதல் பாடல் அறிவிப்பு!Parvathy Thiruvothu, a prominent South Indian actress, has revealed that she has been diagnosed with ADHD.