கணவா், மகன் உயிரிழந்த வேதனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு பெரிய சேமூா் பகுதி சோ்ந்தவா் மலா்விழி (40). இவரது கணவா் சுரேஷ் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தந்தை இறந்த சில மாதங்களில் மகன் பாலசூரியாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனால் மலா்விழி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளாா். கணவா் மற்றும் மகன் இறந்த தூக்கத்தில் மலா்விழி சனிக்கிழமை மாலை திடீரென தூக்கு போட்டு கொண்டாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் மலா்விழி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.