குடும்பத்தின் போக்குவரத்து நிறுவனத்தை தானே அபகரிக்க வேண்டும் என்ற ஆசையில், கணவர், மகன், உறவினருக்கு தினமும் உணவில் சிறிது சிறிதாக விஷம் கலந்து கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரேணு என்ற பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கணவரின் போக்குவரத்து நிறுவனத்தைத் தன் வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தற்போது அந்த நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபம் மட்டும் ரூ.6 கோடி என்பதால், ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கடந்த 12 மாதங்களாக தினமும் உணவில் சிறிது சிறிதாக விஷத்தைக் கலந்து வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.கணவர் சுஷில் குமார் (45) கொடுத்த புகாரில், தில்லியில் உள்ள ரேணுவின் சகோதரி வீட்டிலிருந்து கைது செய்த காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.சுஷில் குமார், திடீரென ஆகஸ்ட் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது ரத்தத்தில் அதிகப்படியான ஈயம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு குணமடைந்த நிலையில், அவரது மகனும், வீட்டில் இருந்த மற்றொரு உறவினரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள்.மூவருக்கும் செய்த மருத்துவப் பரிசோதனைகளில், அனைவருக்கும் ஈயம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இது எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பிறகு, ஒருநாள், ரேணுவின் மகள், தனக்கும், தாய்க்கும் ஒரு பகுதி உணவை எடுத்துவைத்துவிட்டு, மீதமுள்ள உணவில் தாய் எதையோ தெளிப்பதாக தந்தையிடம் கூறியிருக்கிறார்.அது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் 2024ஆம் ஆண்டு முதல் இதனை ரேணு செய்து வருவதாகவும், ரூ.6 கோடி நிறுவனம், கணவர் பெயரில் ரூ.2 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதே, இதற்கான நோக்கம் என்று தெரிய வந்தது.பிறகு, இந்த சதிச் செயலுக்கு ரேணுவின் தாய் மற்றும் சகோதரரும் உடந்தையாக இருந்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவம், கேரளத்தில், ஒட்டுமெத்த குடும்பத்தையும் சையனைடு விஷம் கொடுத்து கொலை செய்த ஜோலி ஜோசப் வழக்கை ஒத்து இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. Slow poison for husband and son! A piece of lead exposed the woman—what’s the backstory?தமிழகத்தில் நிஜரூப தரிசனம் அளிக்கும் முக்கிய கோயில்கள்!