பட்டர் சிக்கன், ஆட்டுக்கறி குருமா, மாட்டுக்கறிக் குழம்பு! விண்வெளியில் பாகிஸ்தான் வீரருக்கு காரசார விருந்து!

Wait 5 sec.

பட்டர் சிக்கன், இளம் ஆட்டுக்கறி குருமா, மாட்டுக்கறி குழம்பு என ஒரு பட்டியலைப் பார்த்ததும், ஏதோ அசைவ உணவக மெனு என்று நினைக்க வேண்டாம், சீன விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருக்கும் பாகிஸ்தான் வீரருக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல்தான் இவை.இந்த பட்டியலில் உள்ள உணவுகள் எல்லாம் ‘ஷென்சூ-24’ விண்கலத்தில் ஏற்றப்பட்டு, பூமியின் வெளிவட்டப் பாதையை சுற்றிக்கொண்டு சீன விண்வெளி மையத்தை அடைந்துள்ளன. சீனாவின் விண்வெளி நிலையத்துக்குப் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த விண்வெளி வீரா் முகமது ஸீஷன் அலி சென்றிருக்கும் நிலையில், அவருக்காக அவர் தெரிவு செய்துகொண்ட உணவுப் பட்டியல்தான் இவை.சீன விண்வெளி மையத்துக்குச் சென்றதும் அவர் உண்ணும் முதல் உணவு வீட்டிலிருக்கும் உணர்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை அவருடன் விண்கலத்தில் ஏற்றப்பட்டுள்ளன.சீனாவில் இருந்து ஏவப்பட்ட ‘ஷென்சூ-24’ விண்கலம் புதன்கிழமை விண்வெளி நிலையத்தை அடைந்தது.இந்தக் குழுவில் இணைந்துள்ள பாகிஸ்தான் வீரா், விண்வெளியில் குறுகிய காலப் பயணத்தை நிறைவு செய்த பின்னா், ‘ஷென்சூ-23’ விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவாா். சீன விண்வெளி வீரா்கள் வழக்கமாக விண்வெளியில் சுமாா் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் நிலையில், பாகிஸ்தான் வீரரின் இப்பயணம் மிகக் குறுகிய கால அளவைக் கொண்டதாக மட்டுமே அமைந்துள்ளது.சீனாவின் விண்வெளி நிலையம் வெளிநாட்டு விண்வெளி வீரா் ஒருவரை வரவேற்பது இதுவே முதல் முறை என்பதால், விண்வெளி மையத்தில் அவருக்கு சிறப்பான விருந்தை அளித்திருப்பதாகவே இந்த உணவுப் பட்டியல் பார்க்கப்படுகிறது.இதன்மூலம், சீனாவின் மனித விண்வெளிப் பயண வரலாற்றிலேயே முதல்முறையாக சீனா, வெளிநாட்டு வீரா்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயணமாக இத்திட்டம் அமைந்துள்ளது.Butter chicken in space? Yes, it's on the menu. #China's space station is hosting a dinner for six, with a specially curated halal food selection of over 100 varieties for its Pakistani astronaut, including beef nihari, lamb korma and curried chickpeas. https://t.co/hAQhojr4qG— CGTN (@CGTNOfficial) November 25, 2026இந்த விண்வெளிப் பயணம் தொடா்பாக கடந்த 2025-இல் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அதைத் தொடா்ந்து நடைபெற்ற மூன்று கட்டத் தீவிர தோ்வுகள் மற்றும் மதிப்பீடுகளின் முடிவில், பாகிஸ்தானைச் சோ்ந்த இருவா் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்குச் சீனாவில் முழு பயிற்சிகள் வழங்கப்பட்டு, தகுதி மதிப்பீடும் நிறைவடைந்துள்ளது. அவா்களில் ஒருவா் தற்போதைய விண்வெளிப் பயணத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Butter chicken, mutton korma, beef curry! A spicy feast for a Pakistani astronaut in space!தங்க நகைகளில் கலப்படம்! கண்டுபிடிக்க முடியாத ரேனியம் உலோகம்! ஹால்மார்க் முத்திரையும் வீணா?