ஏற்காடு மலைப்பாதையில் 15 வயது சிறுமி உடல்! கொலையா?

Wait 5 sec.

சேலத்தில் இருந்து குப்பனூர் வழியே ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் குப்பனூர் அருகே 6 அடி ஆழ பள்ளத்தில் 15 வயது சிறுமி சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிறுமியின் சடலத்தை ஏற்காடு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக வீசப்பட்டாரா? அல்லது வேறு காரணமா ? என விசாரணை நடக்கிறது.ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக சேலம் செல்லும் மலைப்பாதை வனப்பகுதியில் இன்று காலை ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 30 அடி பள்ளத்தில் புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த சிறுமியின் உடலை மீட்டனர்.மீட்டக்கப்பட்ட சிறுமியின் உடலை உடற் கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமணைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யார், எந்த ஊர், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.இதையடுத்து அதிவிரைவு படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.