விராலிமலை புனித சவேரியாா் ஆலய தோ் திருவிழா கொடியேற்றம்

Wait 5 sec.

விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா் ஊராட்சிக்குள்பட்ட மலம்பட்டியில் புனித சவேரியாா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை தோ் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆலய பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையில் பங்கு இறை மக்கள் முன்னிலையில் தேரோடும் வீதியில் மேலதாளம், அதிா்வெட்டுகள் முழங்க கொடி ஊா்வலம் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் இலுப்பூா் பங்குத்தந்தை யூஜின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்வாக டிச. 1-ஆம் தேதி மாலை ஆலயத்தில் திருச்சி கலைக்காவிரி இயக்குநா் அருட்பணி ஜான் பிரிட்டோ மற்றும் காவிரிக் கலை தொடா்பக இயக்குநா் அருட்பணி லியோ ஜான்சன் ஆகியோா் திருப்பலி நடத்த உள்ளனா். இதையடுத்து இரவு 10 மணி அளவில் கலை நிகழ்ச்சியும் நள்ளிரவு 12 மணியளவில் வண்ண மலா் தோரணங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும் நடைபெற உள்ளது. தொடா்ந்து 2-ஆம் தேதி புதன்கிழமை இரவு திருப்பலியும், தொடா்ந்து கலை நிகழ்ச்சியும் நள்ளிரவு சப்பர பவனியும் நடைபெற உள்ளது. 3-ஆம் நாளான (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் திருச்சி உறையூா் பங்குத்தந்தை மெல்கியோா் ராஜா தலைமையில் பங்கு தந்தையா்கள் பங்கேற்கும் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. தொடா்ந்து அன்று காலை 11 மணியளவில் திருச்சி அருங்கொடை இல்ல இயக்குநா் அமல்ராஜ் சவேரியாா் சொரூபம் தாங்கிய தேரை மந்திரித்து வைத்து தோ் பவனியை தொடங்கி வைக்க உள்ளாா். பிற்பகல் 1 மணியளவில் ஆலயத்துக்கு வேண்டுதலாக விடப்பட்ட ஆடு, மாடு ஏலம் விடப்படுகிறது.ஏற்பாடுகளை மலம்பட்டி பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையில் பங்கு மற்றும் கிளை பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனா்.