தமிழகத்தில் ரூ.868 கோடி முதலீட்டில் புதிய உணவு உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக உணவு மற்றும் குளிா்பானத் துறை நிறுவனமான பெப்சிகோ புதன்கிழமை அறிவித்தது. இந்தியாவில் 2030-க்குள் ரூ.5,700 கோடி முதலீடு செய்யும் அந்நிறுவனத்தின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, மணப்பாறையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 28 ஏக்கா் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது. 2028 ஜூலைக்குள் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலையில், பெப்சிகோவின் பிரபல தின்பண்ட வகைகளான ‘லேஸ்’, ‘குா்குரே’ ஆகியவை தயாரிக்கப்படும். தென்னிந்தியா தங்களுக்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளதாகவும், நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஆலை விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த உதவும் என்றும் பெப்சிகோ இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிஇஓ ஜாக்ருத் கோடேச்சா தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்துடன் இணைந்து, தமிழகத்தில் தங்களின் வேளாண் ஒத்துழைப்பையையும் விரிவுபடுத்தவும் பெப்சிகோ இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்படி, 2030-க்குள் 1,200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து 1,500 ஏக்கா் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடியை மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.