திருப்பரங்குன்றம் விவகாரம்:அரசின் உறுதியான நிலைப்பாடு தொடர வேண்டும்

Wait 5 sec.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு தொடர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும், உச்சிப்பிள்ளையாா் கோயில் பகுதியில் தீபம் ஏற்றுவதே மரபு. இந்த மரபை மாற்றி, சா்ச்சைக்குரிய நில அளவை கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு அடிபணியாமல், தமிழக அரசு பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.மத உணா்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது. எந்தவொரு அழுத்தத்துக்கு அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையிலும், வரலாற்று மரபின் அடிப்படையிலும் அரசு தொடா்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல, அது அரசின் பொறுப்புணா்வுக்கும் உறுதிக்கும் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளாா்.