பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலர் சாய் குமாருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரம் கடந்த ஒரு மாதமாக பேசப்பட்டு வந்தாலும் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் முறையாக புகார் கொடுத்த நிலையில் அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை ராஜிநாமா செய்த பின்னர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தலைமைச் செயலர் சாய் குமாருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 24) எழுதியுள்ள கடிதத்தில், எம்எல்ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் ககர்லா உஷா தலைமையில் உள் புகார்க் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் எஸ். மதுமதி, பி. சுமதி, சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவாக அமைச்சர் நிர்மல்குமார், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முறையான புகார் வரவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் நடந்த சம்பவம் குறித்து அப்போதே மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்துள்ளார். வேறு இடத்திற்கு பணி மாறுதல் தருவதாக தலைமைச் செயலர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. Kallakurichi MLA issue: IAS Officers Association writes to the Chief Secretaryமன உளைச்சலுக்கு ஆளான ஆட்சியரும் அவர் கணவரும்; இருந்தும் துணிச்சல்! நீக்கப்பட்ட பதிவில் பெண் ஐஏஎஸ் அதிருப்தி