மாநில சுயாட்சிக்காகவும் உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் திமுகவின் போராட்டம் தொடரும் என்று அரசியலமைப்பு நாளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் நவ. 26 ஆம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை நினைவுகூர்ந்து தலைவர்கள் பலரும் பதிவிட்டு வரும் நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "1949 ஆம் ஆண்டு இதே நாளில்தான், பல நூற்றாண்டுகளாகச் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருந்த இந்தியாவில், சமத்துவத்தை உறுதி செய்து சமூகநீதிக்கு அடித்தளமிட்ட முற்போக்கான அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.காலந்தோறும் மாறிவரும் சமூகத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப பரிணமிக்கும் உயிரோட்டமுள்ள ஆவணமாகவே நமது அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கினார்.குடியரசாக நமது பயணத்தில், 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றிட அரசியலமைப்புச் சட்டத்தை விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்துவது இன்றியமையாதது ஆகிறது. இந்த நோக்கத்துடன்தான் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மத்திய – மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை நமது திராவிட மாடல் அரசு அமைத்தது.தற்போதைய ஆட்சியாளர்கள் அக்குழுவைக் கலைத்திருந்தாலும், மாநில சுயாட்சிக்காகவும் உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டம் தொடரும்!இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முற்போக்கான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கூட்டாட்சித் தன்மையை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்போம்!" என்று பதிவிட்டுள்ளார். On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities.Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document,… pic.twitter.com/NZYJSTUtP6— M.K.Stalin (@mkstalin) November 26, 2026MK Stalin x post on constitution dayகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தலைமைச் செயலருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடிதம்!