பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்! 900 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

Wait 5 sec.

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (நவ. 23, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,421.97 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பகல் 12 மணி நிலவரப்படி 943.16 புள்ளிகள் சரிந்து 82,976.55 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 283.50 புள்ளிகள் குறைந்து 25,517.10 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.வங்கி, நிதிச் சேவைகள், உலோகத் துறைப் பங்குகளின் சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி50 குறியீட்டில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.நிஃப்டி மிட்கேப் 0.3 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 0.2 சதவீதமும் உயர்வைக் கண்டன.துறை வாரியாகப் பார்க்கையில், நிஃப்டி ஐடி அதிக லாபம் பெற்ற நிலையில் நிஃப்டி உலோகம் அதிக சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.49 ஆகத் தொடங்கியுள்ளது.Stock Market: Sensex slumps 900 pts, Nifty below 25,600