தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு எஸ்பிஐ தலைவர் சி.எஸ். ஷெட்டி வாழ்த்து!

Wait 5 sec.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவா் சி.எஸ்.ஷெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், புதிய தேசிய வணிக நாளிதழான தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) அறிமுகம் செய்திருக்கிறது.புதிய தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவா் சி.எஸ்.ஷெட்டி வெளியிட்ட வாழ்த்தில், இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் தொடங்கப்பட்டுள்ள 'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (Financial Standard) இதழின் அறிமுகத்திற்காக குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வளர்ச்சியடைந்த பாரதம் (விக்சித் பாரத்) என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வரும் வேளையில், பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் தொழில்முனைவை ஊக்குவிக்கவும் வலுவான நிதித் துறை மிகவும் அவசியம். இத்துறையை வடிவமைக்கும் விவகாரங்களுக்கு ஆழமான பார்வையையும் தெளிவையும் வழங்குவதன் மூலம், நம்பகமான ஒரு நிதி இதழ் இப்பயணத்தில் முக்கியப் பங்காற்ற முடியும்.இந்தத் தளத்தில் 'ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குழுவினர் அனைவரின் எதிர்காலப் பயணம் வெற்றியடைய எனது நல்வாழ்த்துகள் என்று சி.எஸ்.ஷெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். SBI Chairman C.S. Setty extends his wishes to 'The Financial Standard' newspaper!தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்! செபி தலைவர் துஹின் காந்த பாண்டே வாழ்த்து!